மண்டியா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும், மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்த விஷயத்தில் கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன். நான் நடிப்பதைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் என்னை நடிகை என்று கருத வேண்டாம்.நான் எந்த கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவேன். அந்த அளவுக்கு எனக்கு மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. அதற்காக நான் கட்சி மாறுவதாக அர்த்தம் கற்பிக்க வேண்டாம். ஜனதா தளம் (எஸ்) கட்சியிலேயே இருக்கிறேன். இந்த கட்சி சார்பிலேயே போட்டியிடுகிறேன். ஒருவேளை போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால், கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்.
இதற்கு முன்பு நடந்த தேர்தல் பிரசாரத்தில் கூட நான் கலந்து கொண்டு உள்ளேன். மண்டியா தொகுதியை தவிர வேறு எந்த தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பு தந்தாலும் அதை ஏற்க மாட்டேன். இது நமது ஊர். நான் இந்த மாவட்டத்தின் மருமகள். நான் எதற்கு வேறு தொகுதிக்கு செல்ல வேண்டும். மண்டியா எனக்கு ஒன்றும் புதிது அல்ல.
இங்கு ஆன்மிக சுற்றுலாவாக வந்து உள்ளேன். இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். இவ்வாறு நடிகை ரக்ஷிதா கூறினார். முன்னதாக, அவர் ஸ்ரீகாளிகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி