ஒருநாள் ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்குகிறார் வித்யா. அங்கு உல்லாசமாக இருக்க ரிச்சர்ட்டை வரவழைக்கிறார். அங்கு இருவரும் உல்லாசமாக இருக்கிறார்கள்.இதற்கிடையில் ஏற்கனவே வித்யா மீது சந்தேகத்தில் இருக்கும் பார்த்தி, வித்யாவை பின் தொடர்ந்து அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் உதவியால் வித்யா தங்கும் அறைக்கு எதிர் அறையில் தங்குகிறார்.எதிர் அறையில் ரிச்சர்டும் வித்யாவும் உல்லாசமாக இருப்பதை அறிந்த பார்த்தி மிகுந்த கோபம் அடைகிறார். நண்பனும், காதலியும் தன்னை ஏமாற்றி துரோகம் செய்து விட்டார்கள் என்று எண்ணி மன உலைச்சலுக்கு ஆளாகிறார்.கோபம் அடையும் பார்த்தி, நண்பனும் காதலியும் செய்த துரோகத்திற்காக இவர்களை பலி வாங்கினாரா? என்பதே மீதிக்கதை.
கார்த்தியாக நடித்திருக்கும் ரிச்சர்ட், கதிராக நடித்திருக்கும் பார்த்தி, இருவரும் படம் முழுக்க ஒரே உடையில் வந்து சளிப்பு தட்டினாலும் நடிப்பில் மெருகுட்டுகிறார்கள்.குறிப்பாக பார்த்தி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் கோபமாக நடித்திருக்கிறார். நாயகி வித்யா, ரிச்சர்ட் மற்றும் பார்த்தியுடன் நடிக்கும் காட்சிகளில் வேற்றுமை காட்டியிருக்கிறார். ஹோட்டலில் வேலை செய்பவராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்க வாய்ப்பு குறைவு என்றாலும் கொடுத்த வேலையை சரியாய் செய்திருக்கிறார்.படத்தை பார்க்கும் பொழுது வேறொரு படத்தை ஞாபகப்படுத்துகிறது. ஒரே ஓட்டலுக்குள் இரண்டு மணி நேர கதையை சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ஜெயபிரதீப்.சதீஷின் இசையும் ராசாமதியின் ஒளிப்பதிவும் சுமார்தான். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்குமா என்பது கேள்விகுறிதான்.
மொத்தத்தில் நேர் எதிர் அனைவருக்கும் ‘நேர் எதிர்’…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி