இந்த விவகாரம், சிலருக்கு தெரிந்து, கிராம பஞ்சாயத்தில் புகார் செய்துள்ளனர். இதையடுத்து, கிராம பஞ்சாயத்தார், கடந்த, திங்கட்கிழமை கூடி, விசாரணை நடத்தினர்.ஜாதி மாறி காதலித்ததற்காக, அந்த பெண்ணும், அந்த வாலிபரும், தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த, கிராமத் தலைவர் உத்தரவிட்டார்.அபராத தொகையை, செலுத்த வசதி இல்லை என்று, அந்த பெண் குடும்பத்தினர் கூறினர். இதையடுத்து, அந்த பெண்ணை, ஒரு மரத்தில் கட்டி, அபராதமாக, யார் வேண்டுமானாலும், பாலியல் பலாத்காரம் செய்யலாம் என்று, கிராமத் தலைவர் உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து, தீர்ப்பளித்த, கிராம தலைவர் உட்பட, 13 பேர், அந்த இளம் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர் கதறி அழுத போதும் விடவில்லை.
இந்த கொடூரத்தை அரங்கேற்றியதோடு, இது பற்றி வெளியில் சொல்லக் கூடாது எனவும், மிரட்டியுள்ளனர்.மயங்கிய நிலையில் கிடந்த, அப்பெண்ணை, குடும்பத்தார், மருத்துமனையில் சேர்ந்தனர். பின், லாப்பூர் போலீசில் புகார் செய்தனர்.இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், மாநிலம் முழுவதும், கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த கொடூரத்திற்கு காரணமான, கிராம தலைவர் உட்பட, அனைவரையும் கைது செய்யும்படி, முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, மேற்கு வங்க மாநில அரசு உத்தரவிட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி