செய்திகள் பால் வடியும் அதிசய வேப்பமரம்…

பால் வடியும் அதிசய வேப்பமரம்…

பால் வடியும் அதிசய வேப்பமரம்… post thumbnail image
இலுப்பூர்:-இலுப்பூர் அந்தோணியார்கோவில் 2–வது தெரு கரடிக்காட்டில் அமிர்தம் என்பவரின் வீட்டு முன்பு இருக்கிற வேப்பமரத்தில் பால் வடிகிறது.
இந்த வேப்பமரம் கன்றாக நட்டு 16 வருடம் ஆகிறது. இந்த வேப்பமரத்தில் கடந்த 2 தினங்களாக பால் போன்ற திரவம் வடிகிறது. பால் போன்ற திரவம் வடிவதை கேள்விபட்ட அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்களும், சுற்றுவட்டார பொதுமக்களும் திரண்டு வந்த வேப்பமரத்தில் பால்வடியும் அதிசயத்தை பார்த்து சென்றவண்ணம் உள்ளனர்.

அந்த பால் போன்ற திரவம் பானக்கம் போல் இனிப்பாக உள்ளதாக பால் போன்ற திரவத்தை ருசித்து பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர். குறிப்பாக பால்போன்ற திரவம் பால்போன்று மரத்தில் இருந்து பொங்கி வடிகிறது. மேலும் வேப்பமரத்தில் இருந்து வடியும் பால்போன்ற திரவத்தை பார்க்கவரும் பொதுமக்கள் கையால் பிடித்து ருசிபார்க்கின்றார்கள்.
பால்வடியும் வேப்பமரத்தின் கீழ்புறத்தில் நாற்காலியை போட்டு சில்வர் பாத்திரத்தை வைத்து பால்போன்ற திரவத்தினை அப்பகுதி பொதுமக்கள் பிடிக்கிறார்கள்.

வேப்பமரத்தில் பால் போன்ற திரவம் வடிவது தெய்வச்செயலா என்றும் அதனைபார்க்க வரும் பொதுமக்கள் கலந்துரையாடல் செய்கிறார்கள்.இலுப்பூரில் வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி