மெர்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கடந்த சில நாட்களாக மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டி ஒன்றில் முதல்நிலை வீரரான நடால், 6-ம்நிலை வீரரான ரோஜர் பெடரரை 7-6 (7-4), 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
முதல் செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இதனால் ‘டை பிரேக்கர்’ வரை முதல் செட் சென்றது. இறுதியில் நடால் முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் நடால் தாக்குதலுக்கு பெடரரால் ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த செட்டை 6-3 என நடால் கைப்பற்றினார்.
3-வது செட்டை வென்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம் என்று ஆக்ரோஷத்துடன் ஆடிய நடால் 6-3 என எளிதில் 3-வது செட்டையும் கைப்பற்றினார். இதனால் 3-0 என்ற நேர் செட் கணக்கில் நடால் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
வரும் 26-ந்தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் நடால், வாவ்ரிங்காவை எதிர்கொள்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி