அரசியல்,செய்திகள் பைத்தியக்கார முதல் அமைச்சர் கெஜ்ரிவால்-ஷிண்டே…

பைத்தியக்கார முதல் அமைச்சர் கெஜ்ரிவால்-ஷிண்டே…

பைத்தியக்கார முதல் அமைச்சர் கெஜ்ரிவால்-ஷிண்டே… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லியில் கடமையைச் செய்யாத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், டெல்லி காவல்துறை அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் கெஜ்ரிவால் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியதை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே, கெஜ்ரிவாலை பைத்தியக்கார முதல் அமைச்சர் என்று மறைமுகமாக தாக்கினார்.

“நானும் போலீஸ்துறையில் பணிபுரிந்தவன் தான். அந்த காலத்தில் எனது திருமணத்திற்காக விடுமுறை எடுத்திருந்தேன். ஆனால், திடீரென கேர்வாடி பகுதியில் கலவரம் ஏற்பட்டதால் முன்னறிவிப்பின்றி எனது விடுமுறையை மேலதிகாரிகள் ரத்து செய்தனர்.இப்போது, பைத்தியக்கார முதல்வரின் நடவடிக்கைகளின் விளைவாக, டெல்லி போலீஸ்காரர்களின் விடுமுறையை நான் ரத்து செய்ய நேரிட்டுள்ளது” என்று கூறிய ஷிண்டே, கெஜ்ரிவாலின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஷிண்டேயின் கருத்து தொடர்பாக காங்கிரஸ் எந்த கருத்தும் தெரிவிக்காமல் விலகியே இருக்கிறது.

இதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் டி.பி.திரிபாதி நிருபர்களிடம் கூறுகையில், “முதல்வர் என்பதற்கு கெஜ்ரிவால் புது அர்த்தம் கொடுத்திருக்கிறார். அது பைத்தியக்காரத்தனம் ஆகும்” என்றார்.இந்த கருத்துக்கள் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி