வாஷிங்டன் முதல் நியு இங்கிலாந்து வரை பனி படர்ந்துள்ளது.வாஷிங்டனில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. அங்கு திங்கட்கிழமை விடுமுறை நாளாகும்.ஆனால்,செவ்வாய்க்கிழமையும் யாரும் பணிக்கு செல்லவில்லை.
புதன்கிழமை அரசு அலுவலகங்கள் 2 மணி நேரம் தாமதமாகவே திறக்கப்பட்டன. கடும் பனியால் அதிகாரிகள் பணிக்கு வராமல் விடுமுறை எடுத்துக் கொண்டனர். சிலர் வீட்டில் இருந்தே பணிபுரிய அலுவலகம் அனுமதித்தது. பயணிகள் மற்ற இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளானது. சரக்குகள் அனுப்புவதும் பாதிக்கப்பட்டது. வியாபாரங்கள் அனைத்தும் முடங்கின.அமெரிக்காவில் உள்ள பல அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஓட்டல்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தன.
சிகாகோவில் நேற்று தட்பவெப்பநிலை மைனஸ் 28 டிகிரி செல்சியசாக இருந்தது. நியூயார்க்கில் சாலைகளில் பனியின் அளவு 14 அங்குலமும், வாஷிங்டன் விமான நிலையத்தில் 7, பிலடெல்பியா விமான நிலையத்தில் 11 அங்குல உயரத்துக்கு படிந்திருந்தது. மேலும் அமெரிக்காவில் இருந்து செல்லும் 3,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்காண பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி