தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக அக்ஷய் வெளிநாடு செல்வதால் திருமணம் முன்னதாகவே நடப்பதாக அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு சங்கீத் நிகழ்ச்சியும், மெஹந்தி விழாவும் நடந்தது.நள்ளிரவில் காக்டெயில் பார்ட்டியும் நடந்தது. நேற்று மாலை சமீரா திருமண உடைகளை அணிந்தார். அவரை மராட்டிய முறைப்படி அக்ஷய் மணந்தார். சமீராவுக்கான திருமண உடைகளை நீடா லுல்லா வடிவமைத்திருந்தார். திருமணத்துக்கான ஏற்பாடுகளை சமீராவின் சகோதரி சுஷாமா செய்திருந்தார். இருவீட்டு குடும்பத்தினரும் திருமணத்தில் கலந்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு சமீரா கூறும்போது, நான் எல்லை இல்லாத மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
இதுபோன்ற ஒருவரைத்தான் என் வாழ்க்கை துணையாக அடைய எண்ணி இருந்தேன். அது நடந்துவிட்டது. என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதைவிட வேறு எதுவும் எனக்கு தேவையில்லை என்றார். திருமணம் நடந்துவிட்டதால் சமீரா நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி