செய்திகள்,திரையுலகம் இயக்குனர்களை டார்ச்சர் செய்யும் ஹீரோயின்கள்…

இயக்குனர்களை டார்ச்சர் செய்யும் ஹீரோயின்கள்…

இயக்குனர்களை டார்ச்சர் செய்யும் ஹீரோயின்கள்… post thumbnail image
கேரளா:-சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க போன்ற படங்களில் நடித்த மம்தா மோகன்தாஸ் முறைப்படி கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையும் கற்றுத் தேர்ந்தவர். சிம்பு நடித்த காளை, ஜெய் நடித்த கோவா போன்ற படங்களில் பாடல் பாடினார். அதேபோல் பீட்சா பட ஹீரோயின் ரம்யா நம்பீசனும் கர்நாடக இசை கற்றவர்.

தமிழில் பாண்டிய நாடு படத்தில் பை பை பை பாடல் பாடினார். இவர்களைப் பார்த்து சில ஹீரோயின்கள் தங்களுக்கும் பாட்டு பாட வாய்ப்பு தரும்படி இசை அமைப்பாளர்கள், இயக்குனர்களை டார்ச்சர் செய்கிறார்களாம். அவர்களை கண்டதுமே இசை அமைப்பாளரும், இயக்குனர்களும் திகிலடைந்து ஓட்டம் பிடிக்கின்றனர்.மலையாளத்தில் 100 டிகிரி செல்சியஸ் என்ற படம் உருவாகிறது. இதில் மேக்னா ராஜ், சுவேதா மேனன், அனன்யா, பாமா என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

தங்கள் எல்லோருக்கும் பாட்டு பாட சான்ஸ் தர வேண்டும் என்று இயக்குனரிடம் வற்புறுத்த வேறு வழியில்லாமல் வாய்ப்பு தர சம்மதித்தார். மேக்னாவும், அனன்யாவையும் பாடவைத்த இயக்குனர் ராகேஷ் கோபன் அடுத்து கவர்ச்சி நடிகை சுவேதா மேனன், பாமாவுக்கு பாட பயிற்சி அளித்து வருகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி