இந்தப்போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றனர்.நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றும் செய்யப்பட்டு இருந்தது. காயம் அடைந்த வேகப்பந்து வீரர் மிலினுக்கு பதிலாக மில்ஸ் இடம் பெற்றார்.
இந்திய அணி கேப்டன் டோனி ‘டாஸ்’ வென்று இந்த முறையும் நியூசிலாந்தை முதலில் விளையாட அழைத்தார். நியூசிலாந்தின் தொடக்க ஜோடியை முகமது ஷமி எளிதில் பிரித்தார். ரைடர் 20 ரன்னில் அவரது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
2–வது விக்கெட்டுக்காக குப்திலுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளியது.17–வது ஓவரில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழைவிட்ட பிறகு ஆட்டம் தொடங்கிய சிறது நேரத்தில் குப்தில் விக்கெட்டை ரெய்னா கைப்பற்றினார். அவர் 65 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 114 ஆக இருந்தது. 2–வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன் எடுத்தது. அடுத்து ரோஸ் டெய்லர் களம் வந்தார்.
வில்லியம்சன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 52 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் அரை சதத்தை தொட்டார். 51–வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இது 8–வது அரை சதம் ஆகும்.நியூசிலாந்து அணி 33.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன் குவித்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.வில்லியம்சன் 76 ரன்னும், டெய்லர் 26 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியது. 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வில்லியம்சன் 77 ரன்னில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த ஆண்டர்சன் அதிரடியாக விளையாடி 44 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக வந்த மேக்குல்லம் ரன் எதுவும் எடுக்காமல் பெவுலியன் திரும்பினார். இறுதியாக நியூசிலாந்து அணி 42 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 271 ரன்கள் சேர்த்தது. ரோஞ்சி 18 ரன்னுடனும், மில்ஸ் 2 ரன்னுடனும் களத்தில் அவுட்டாகாமல் இருந்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி