131 தரநிலைப் புள்ளிகள் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தில் உள்ளது. 117 புள்ளிகளுடன் இந்திய அணி 2ம் இடத்திலும், 111 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாமிடத்திலும் உள்ளன. இங்கிலாந்து 4-வது இடத்தில் (107 புள்ளி) உள்ளது.
சார்ஜாவில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை பாகிஸ்தான் அணி வென்று, தொடரை 1-1 என சமன் செய்தது. இதனால் அந்த அணி 2 தரநிலைப் புள்ளிகளை இழந்து, 5-வது இடத்தில் நிலைபெற்றது. இலங்கை அணி 3 ரேட்டிங் புள்ளிகளை பெற்றபோதும், தரநிலையில் 6-வது இடத்திலேயே உள்ளது.
அணிகளின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்:-
1.தென் ஆப்ரிக்கா 133
2.இந்தியா 117
3.ஆஸ்திரேலியா 111
4.இங்கிலாந்து 107
5.பாகிஸ்தான் 100
6.ஸ்ரீலங்கா 90
7.வெஸ்ட் இண்டீஸ் 87
8.நியூசிலாந்து 82
9.ஜிம்பாப்வே 34
10.பங்களாதேஷ் 18
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி