இதற்கிடையே சுனந்தாவின் உடல் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவரது சாவு இயற்கைக்கு மாறானது என்பது தெரியவந்துள்ளது.
எதிர்பாராத, இயற்கைக்கு மாறான முறையில் சுனந்தா மரணம் அடைந்திருப்பதாகவும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும் தடய அறிவியல் துறை தலைவர் டாக்டர் குப்தா தெரிவித்தனர். இந்த காயம் காரணமாக அவர் இறந்திருக்கலாம், அல்லது வேறு காரணம் இருக்கலாம் என்று கூறிய குப்தா, மற்ற விவரங்களை தெரிவிக்கவில்லை. முழு பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாக இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என தெரிகிறது. அதேசமயம் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுனந்தாவின் உடல் சசிதரூரிடம் ஒப்படைக்கப்பட்டு, டெல்லி லோதி சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது குடும்பத்தினர் உறவினர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் மாலையில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே