செய்திகள்,திரையுலகம் அட்லியின் அடுத்த படத்தில் விஜயுடன் இணையும் தீபிகா படுகோனே?…

அட்லியின் அடுத்த படத்தில் விஜயுடன் இணையும் தீபிகா படுகோனே?…

அட்லியின் அடுத்த படத்தில் விஜயுடன் இணையும் தீபிகா படுகோனே?… post thumbnail image
சென்னை:-ஜில்லா படத்தை தொடர்ந்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை அவரது மானேஜர் பி.டிசெல்வகுமார் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதை விஜய்யும் மறுக்கவில்லை.

ஆனால் அதற்கு முன்பாக விஜய், ராஜா ராணி வெற்றிப்பட இயக்குனர் அட்லீக்கு ஒரு படம் நடித்து கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அட்லி, ஷங்கரின் உதவியாளராக இருக்கும்போது, நண்பன் படப்பிடிப்பின்போதே விஜய்க்கு நெருக்கமானவராக மாறியிருக்கிறார். அந்த நட்பின் அடிப்படையிலும் “ராஜா ராணி” வெற்றி கொடுத்த தைரியத்திலும் விஜய்க்கு தயார் செய்து வைத்திருந்த ஒரு ஸ்கிரிப்டை அவரிடம் காண்பித்திருக்கிறார். ஸ்கிர்ப்டை பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்த விஜய், இப்படி ஒரு கதையைத்தான் இதுவரை நான் தேடிக்கொண்டிருந்தேன் என்று மகிழ்ச்சியுடன் கூறி, உடனடியாக திரைக்கதை அமைக்கும் பணியை மேற்கொள்ளுங்கள். முருகதாஸின் படத்தை முடித்துவிட்டு, உடனே இந்த படவேலையை தொடங்கலாம் என உறுதியாக கூறிவிட்டாராம்.

விஜய் கால்ஷீட் கொடுத்தால் இந்த படத்தை தயாரிக்க தயார் என மூன்று நிறுவனங்கள் அட்லிக்கு வாக்கு கொடுத்திருக்கின்றதாம். எனவே முருகதாஸ் படத்தை தொடர்ந்து இந்த படத்தின் வேலைகள் உடனடியாக துவங்கப்படும் என தெரிகிறது. இந்த படத்தின் நாயகிக்கு ஹீரோவுக்கு இணையான வேடமாக இருப்பதால் தீபிகா படுகோனே பரிசீலிக்கப்பட்டு வருகிறார். அவரது கால்ஷீட் கிடைக்காத பட்சத்தில் அனுஷ்கா, அல்லது நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்படுவார் என அட்லி தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி