கடந்த சனிக்கிழமை அன்று கைதூம் கிராமத்தின் அருகே 48 கலைமான்கள் பனி மூடிய தண்டவாளப் பகுதிகளில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்துகொண்டிருந்த ரெயிலின் ஓசை கேட்டதும் திடுக்கிட்ட அந்த மான்கள் தப்பிப்பதற்கு பதிலாக ரெயிலின் முன்னாலேயே பாயத் தொடங்கின. உடனடியாக ரெயிலை நிறுத்த முடியாததால் அவை அனைத்தும் ரெயிலில் சிக்கி உயிரை விட்டன.இந்த சம்பவம் பார்க்கவே வருத்தத்தைத் தருவதாக இருந்ததாக மான்களை வளர்த்து வரும் இங்மார் பிளைன்ட் என்பவர் தெரிவித்தார்.
பொதுவாக கலைமான்களை ஒரு காரில் பின்தொடர்ந்தால் அவை ஒரு புறமாக ஓடி தப்பிப்பதற்கு முயற்சி பண்ணாது. காரின் முன்னால் பாயவே அவை முயற்சிக்கும். எனவே வேகமாக வந்து கொண்டிருக்கும் ரெயிலின் முன்னே அவை பாயும்போது குறைந்தது பிரேக் பிடித்து நிறுத்துவதற்கு ஒரு கி.மீ தூரம் தேவைப்படும் ரெயிலில் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று ரெயில் பிராந்தியப் போக்குவரத்து பராமரிப்பு பொறுப்பு அதிகாரியான பிரடெரிக் ரோசண்டஹி வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி