இத்தாலி:-இத்தாலியின் பர்மாவைச் சேர்ந்த ரோஷனோ ஃபெர்ரிட்டி என்ற முடி அலங்கார நிபுணர். இவர் இத்தாலியின் மிலன், பிரான்சின் பாரிஸ், ஸ்பெயினின் மாட்ரிட், அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி நகரங்களில் சுமார் 20 சலூன்களை இவர் நடத்தி வருகிறார்.
மறைந்த முன்னாள் இளவரசி டயானா, ஹாலிவுட் பிரபலங்கள் லேடி ககா, சல்மா ஹயக் உள்ளிட்ட பிரபலங்கள் இவரது வாடிக்கையாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இந்தியாவிலும் மும்பையில் உள்ள தி போர் சீசன்ஸ் என்ற நட்சத்திர ஓட்டலில் ஒரு சலூனை திறந்துள்ளார். அடுத்தபடியாக குர்கானில் உள்ள தி ஓபராய் ஓட்டலில் 2வது சலூனை இந்தியாவில் திறக்க திட்டமிட்டுள்ளார்.இங்கு முடி திருத்தம் செய்ய அல்லது அலங்காரத்துக்காக செய்ய இந்திய மதிப்பில் 50,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கபடுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி