இதுதொடர்பாக, இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா விளக்கம் அளித்தார். அதுகுறித்த விவரம் வருமாறு:-
மக்களவை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. இந்த தேர்தலைப் பொறுத்தவரை ராகுல்காந்தி தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது. இந்த தேர்தல் சித்தாந்தங்களுக்கிடையேயான போட்டியாக இருக்கும். தற்போதுள்ள நிலையைவிட கடினமான சூழலை கடந்த காலத்தில் காங்கிரஸ் எதிர்கொண்டுள்ளது.
மதசார்பின்மையே தங்களின் அடையாளம். தேசத்தின் மதசார்பற்ற நிலையை காக்க காங்கிரஸ் போராடும். அரசியல் நெருக்கடியால் மதசார்பின்மை பற்றி பேச விரும்பவில்லை. ஆதார் அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டால் ஊழல் ஒழிக்கப்படும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் வரும் பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்தும் என்று பேசினார்.மேலும் அவர் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சி வன்முறையையும் வெறுப்பையும் பரப்பி வருகிறது. வகுப்புவாத சக்திகளின் அச்சுறுத்தல் உள்ளதால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எதிர்க்கட்சிகள் பரப்பிய பொய்களையும் மீறி காங்கிரஸ் சாதனை புரிந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி