சியோல்:-தென்கொரியாவுக்கு பாதுகாப்பு கொடுக்க அமெரிக்கா தனது 30 ஆயிரம் ராணுவ வீரர்களை அங்கு நிறுத்தி வைத்திருக்கிறது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கின்றன.
இது வடகொரியாவுக்கு ஆத்திரம் மூட்டியுள்ளது. எனவே வடகொரியா ராணுவ சார்பில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், ‘அமெரிக்கா, தென்கொரியா ராணுவம் போர் ஒத்திகை நடத்த தீர்மானித்து இருப்பது அபாயகரமானது, எரிச்சலூட்டும் செயலாகும். கொரியா தீபகற்பத்தில் அமைதியை சீர்குலைப்பதாக அமையும்.
ஆகவே அமெரிக்கா இந்த போர் ஒத்திகையை நிறுத்த வேண்டும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரத்தில் இந்த ராணுவ ஒத்திகை திட்டமிட்டபடி நடைபெறும் என தென்கொரியா கூறி விட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி