டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராம்டின் 55 ரன்னும் (நாட்-அவுட்), பிளட்சர் 40 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் மிலின் 2 விக்கெட்டும், மெக்லகன், நாதன் மெக்கல்லம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக லுக் ரோஞ்ச் 51 ரன்னும் (நாட்-அவுட்), ராஸ் டெய்லர் 39 ரன்னும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹோல்டர், சுனில்நரின், ரஸ்செல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். நியூசிலாந்து வீரர் லுக் ரோஞ்ச் ஆட்டநாயகன் விருது பெற்றார்.இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் 20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி