இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அவரை கொலை செய்து விட்டனர். எனவே, அவரது நினைவாக பிப்ரவரி 14–ந்தேதி வாலன்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
வழக்கமாக இந்த காதலர் தினம் வாடிகன் நகரில் கொண்டாடப்பட மாட்டாது. ஆனால் இந்த வருடம் காதலர் தினத்தன்று இவ்விழா மறைமுகமாக கொண்டாடப்படுகிறது.இதற்கான ஏற்பாட்டை போப் ஆண்டவர் பிரான்சிஸ் செய்துள்ளார். அதற்கான அறிவிப்பு போப் ஆண்டவர் தலைமையிலான கவுன்சிலில் இருந்து பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற பிப்ரவரி 14–ந்தேதி வாடிகன் நகரத்தில் ஒரு விழா நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க விரும்புபவர்கள் வருகிற 30–ந்தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் திருமணம் ஆனவர்களாகவும் திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். இவர்களுடன் பொதுமக்கள் சிலரும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி