அப்போது இந்த சீட்டில் ஒருநாள் உட்கார்ந்து பார்த்தால்தான் அதிலுள்ள கஷ்டம் புரியும் என்று சொல்வார் ரகுவரன். அதையடுத்து அவர்களுக்கிடையே நடக்கும் வாக்குவாதம் முற்றி, ஒருநாள் மட்டும் முதல்வராக இருந்துபார் என்று அர்ஜூனை அந்த இருக்கையில் அமர வைப்பார் ரகுவரன்.
ஒருநாள் முதல்வராக பதவி ஏற்கும் அர்ஜூன், அந்த ஒருநாளில் மற்றவர்களால் செய்ய முடியாத சில செயல்களை செய்து மக்களின் நன்மதிப்பை பெறுவார். அதனால் அடுத்து அவரையே மக்கள் முதல்வராக்க வாக்களிப்பார்கள். இந்த படத்தை தமிழில் இயக்கிய ஷங்கர் அதன்பிறகு இந்தியிலும் நாயக் என்ற பெயரில் எடுத்தார். இரண்டு மொழியிலும் அப்படம் வெற்றி பெற்றதோடு, பல அரசியல்வாதிகளின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இப்போது டெல்லியில் ஆட்சியமைத்திருக்கும் ஆம்ஆத்மி கட்சியைச்சேர்ந்த கெஜ்ரிவால், முதல்வன் பட பாணியில்தான் தனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அதிரடியாக எடுத்து வருகிறார். குறிப்பாக, பொதுமக்கள் தங்களது குறைகளை முதல்வரிடமே நேரடியாக சொல்லும் வகையில் செயல்படத் தொடங்கியிருக்கிறார்.ஆக, இப்போது இந்திய அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை பத்து வருடங்களுக்கு முன்பே கணித்து அதை படமாக்கி விட்டார் இயக்குனர் ஷங்கர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி