இன்று திருவள்ளுவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மீலாது நபியும், திருவள்ளூர் தினமும் அடுத்தடுத்து வருவதால், டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறையை தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து ‘டாஸ் மாக்’ கடைகளில் மதுபானங்களை வாங்கி இருப்பு வைப்பதில் மதுபிரியர்கள் மற்றும் கள்ளச்சந்தை வியாபாரிகள் காட்டிய ஆர்வத்தினால், கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மது விற்பனை ரூ.255 கோடியை தாண்டி உள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 லட்சத்து 81 ஆயிரம் பெட்டிகள் பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுபான வகைகள் விற்று தீர்ந்துள்ளன. இதில் 80 சதவீதம் பிராந்தியும், 10 சதவீதம் ரம்மும், 10 சதவீதம் ஓட்கா, விஸ்கி போன்ற மதுவகைகளும் அடங்கும்.
பீர்கள் 91 ஆயிரம் பெட்டிகள் விற்று தீர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக நேற்று முன்தினம் மட்டும் ரூ.120 கோடி அளவுக்கு மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளது.அதிகபட்சமாக சென்னையில் ரூ.26 கோடிக்கும், மதுரையில் ரூ.25 கோடிக்கும், கோவையில் ரூ.24 கோடிக்கும், திருச்சியில் ரூ.23 கோடிக்கும், சேலத்தில் ரூ.22 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது.
வெளிநாட்டு மதுபான வகைகளை விற்பனை செய்வதற்காக சென்னையில் உள்ள தனியார் ஷாப்பிங் மால்களில் திறக்கப்பட்டுள்ள ‘எலைட்’ மதுபான கடைகளில் மொத்தம் ரூ.10 லட்சத்து 70 ஆயிரத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.வள்ளலார் தினத்தையொட்டி, 17-ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ‘டாஸ்மாக்’ மதுபான கடைகளில் மது விற்பனை ரூ.100 கோடிக்கு மேல் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி