ஆனால் மற்றொரு பக்கத்தில் ஆம் ஆத்மி உள்ளது. இந்த கட்சி நேர்மையான அரசியலை நடத்துகிறது. ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க.க் கும் இடையே ஏற்பட்டுள்ள இத்தகைய போட்டி காரணமாக காங்கிரஸ் களத்திலேயே இல்லை. எனவே நாடு சரியான முடிவை எடுக்க வேண்டும்.
இந்த நாட்டுக்கு நல்ல, நேர்மையான, உறுதியான முடிவு எடுக்கக் கூடியவர்கள் யார் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சி முதலில் 300 எம்.பி தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருந்தது. தற்போது 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய 10 மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட ஆம் ஆத்மி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.இந்த மாநிலங்களில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து மனு பெறுவது இன்றுடன் முடிந்தது.
அடுத்த ஓரிரு நாட்டிகளில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விடுவார்கள். அவர்கள் பெயர் விபரத்தை வரும் 20–ந் தேதிக்குள் இந்த வார இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தல் களத்தில் முதல் நபராக ஆம் ஆத்மி குதிப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி