ஆனால் படத்தில் பார்த்தபோது, ஜூனியர் நடிகரான அர்ஜுன் கபூரின் கேரக்டரை விட தனது கேரக்டரை டம்மி ஆக்கியிருந்ததால் அதிர்ச்சி அடைந்தாராம். அடுத்தடுத்த படங்களிலும் அவருக்கு அதேபோல் வாய்ப்பு வந்தது. குறிப்பாக ஷாருக்கான் நடிக்கும் ஹேப்பி நியூ இயர் படத்தில் நடிக்க பிருத்விராஜுக்கு வாய்ப்பு போனது. பெரிய படம் என்பதால் உடனே ஒப்புக்கொண்டார். ஆனால் அவுரங்கசீப் படத் தில் பிருத்விராஜின் கேரக்டரை பார்த்து அவருக்கு நெருக்கமானவர்களே விமர்சனம் செய்ததால் அப்செட்டில் இருந்தார் பிருத்வி.
இதையடுத்து உடனடியாக ஷாருக் படத்திலிருந்து விலகிவிட்டார். பாலிவுட்டில் தன்னை டம்மி பீஸாக பயன்படுத்துகிறார்கள் என நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டாராம். தாய்மொழியில் மட்டுமே கவனம் செலுத்துவதுதான் தனக்கு நல்லது என முடிவு எடுத்து மலையாள படங்களில் மட்டும் இப்போது அவர் நடித்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி