இதனிடையே, கொடோவா ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணம் ஆனது. இதையடுத்து இவர் வென்ற தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு, அஞ்சுவுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் கிரேசிற்கு வெள்ளியும், பிரான்சின் பார்பருக்கு வெண்கலமும் தரப்படவுள்ளது.எப்போது இதற்கான பதக்கமும், பரிசுப்பணமும் தருவர் என்று உறுதியாகத் தெரியவில்லை. இதுகுறித்து அஞ்சு ஜார்ஜ், 36, கூறியது:-ஒன்பது ஆண்டுக்குப் பின் உண்மை வெளியில் வந்துள்ளது. இத்தனை ஆண்டுகள் காத்திருத்தலுக்கு பலன் கிடைத்தது,மகிழ்ச்சியாக உள்ளது.
ஏனெனில், எனது காலத்தில் போட்டிகளில் பங்கேற்ற சில ரஷ்ய வீராங்கனைகள் மீது எனக்கு அப்போதே சந்தேகம் இருந்தது. இதேபோல, 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கலம் வென்ற ரஷ்யாவின் சிமக்கினா, கொடோவா இருவரும் ஊக்கமருந்து பயன்படுத்தியது 2006 சோதனையில் தெரியவந்தது. இவர்களை ரஷ்ய தடகள கூட்டமைப்பு “சஸ்பெண்ட்’ செய்துள்ளது.
இப்போட்டியில், 5வது இடம் பெற்ற எனக்கு, வெண்கலப் பதக்கம் பெறும் தகுதி உள்ளது.ஏனெனில், இந்த ஒலிம்பிக்கில் ஒரு சில வீராங்கனைகள் தான், நேர்மையாக பங்கேற்றதாக இங்கிலாந்தின் ஜேடு ஜான்சன் என்ற வீராங்கனை தெரிவித்திருந்தார்.இவ்வாறு அஞ்சு ஜார்ஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய தடகள கூட்டமைப்பு தலைவர் சுமரிவாலா கூறுகையில்,”” எங்களுக்கு இன்னும் முறைப்படியான அறிவிப்பு வரவில்லை. அஞ்சுவின் இணையதளத்தில் தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் எங்களுக்கு கடிதம் வரும் என நம்புகிறோம். எப்படி இருப்பினும், இந்தியா சார்பில் உலக தடகளத்தில் தங்கம் வென்ற ஒரே வீராங்கனை அஞ்சு தான்,” என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி