செய்திகள்,விளையாட்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு…

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு…

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு… post thumbnail image
நேப்பியர்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இந்தியா–நியூசிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 19–ந்தேதி நேப்பியரில் நடக்கிறது. அதை தொடர்ந்து 22, 25, 28 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மற்ற போட்டிகள் நடக்கிறது.

ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. பேட்ஸ்மேன் கோலின் முன்ரோ அணியில் இடம் பெறவில்லை. காயத்தில் இருந்து குண்மடைந்ததால் வேகப்பந்து வீரர் சவுத்தி அணிக்கு தேர்வாகி உள்ளனர்.

அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்:–

1.மேக்குல்லம் (கேப்டன்),
2.குப்தில்
3.ரைடர்
4.வில்லியம்சன்
5.ரோஸ் டெய்லர்
6.கோரி ஆண்டர்சன்
7.லுகே ரோன்ஜி
8.ஜிம்மி நீசம்
9.நாதன் மேக்குல்லம்
10.டிம் சவுத்தி
11.மில்ஸ்
12.மெக்லகன்
13.ஆடம் மிலின்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி