இந்நிலையில், அங்குள்ள சிக்காக்கோ ஆற்றங்கரை ஓரமாக ஒரு பெண்ணுடன் 2 நண்பர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் வைத்திருந்த நவீன செல்போன் கையில் இருந்து நழுவி ஆற்றுக்குள் விழுந்தது. விலையுயர்ந்த செல்போன் என்பதாலும், அதில் பல தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாலும் அதனை இழக்க விரும்பாத உரிமையாளர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்றுக்குள் குதித்தார்.அவரை தொடர்ந்து உடன் வந்த பெண்ணும், அவரையடுத்து மற்றொரு நபரும் அடுத்தடுத்து ஆற்றுக்குள் குதித்தனர். ஐஸ் குழம்பு போல் மாறி விட்டிருந்த அந்த நீரில் நீந்த முடியாமல் மூவரும் அலறி கூச்சலிட்டனர். ஆற்றங்கரையோரமாக நடந்து சென்ற சிலர் இந்த காட்சியை கண்டு திகைத்துப் போய் மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த மீட்புப் படையினர் செல்போன் உரிமையாளரான சுமார் 26 வயது மதிக்கத்தக்க நபரை ஆற்றுக்குள் இருந்து பிணமாக வெளியே எடுத்தனர். அவரது நண்பரையும் உடல் விரைத்துப் போய், மயங்கிய நிலையில் மீட்ட அவர்கள், பெண் தோழியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.குளிரில் ரத்தம் உறைந்துப் போய் அந்த பெண்ணும் ஆற்றுக்குள் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி