செய்திகள் ஒரு கிலோ மல்லி பூ 1500 ரூபாய்…

ஒரு கிலோ மல்லி பூ 1500 ரூபாய்…

ஒரு கிலோ மல்லி பூ 1500 ரூபாய்… post thumbnail image
கோயம்பேடு:-பொங்கல் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ரூ. 800க்கு விற்ற ஒரு கிலோ மல்லி ரூ. 1500க்கும் ரூ. 600க்கு விற்ற கனகாம்பரம் ரூ. 1000க்கும் விற்கப்படுகிறது.

விலை ஏற்றத்தால் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்களையே விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். பூக்கள் விலையேற்றம் குறித்து வியாபாரி கூறும் போது, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கடப்பா, சேலம், தெங்பூர், அரியனூர், திண்டுக்கல், செந்துரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 7 லாரிகள் பூக்கள் வரும். இன்று 2 லாரிகளில் மட்டுமே வந்துள்ளது.அதிக அளவு நீடித்து வரும் பனிப்பொழிவால் பூக்கள் கருகி விட்டன. இதனால் பூக்கள் வரத்து குறைந்து உள்ளது. இந்த விலை ஏற்றம் ஒரு வாரம் வரை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு மற்றும் பொருட்கள் வாங்க மார்க்கெட், பஜார் வீதிகளில் பொதுமக்கள் குவிந்து உள்ளனர். இதனால் அப்பகுதி களைகட்டி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி