கோயம்புத்தூர்:- கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பாண்டியன்(32). இவர் நேற்று ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது 63 வயது பெண் ஒருவர் பாண்டியனை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
இதுகுறித்து பாண்டியன் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த பெண் வீட்டில் வைத்து விபசாரம் செய்வது தெரியவந்ததுள்ளது.
விபசாரத்தில் ஈடுபட்டதாக ஒண்டிபுதூரை சேர்ந்த பார்வதி (63) என்ற அந்த பெண்ணையும் நாகப்பட்டிணத்தை சேர்ந்த சரசு (40) என்பவரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் ரத்தினபுரி பகுதியில் விபசாரத்தில் ஈடுபட்டதாக ஜோதிமணி(40) என்ற பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி