வீரம் படத்தின் ஒரு சண்டை காட்சியில் ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது சண்டை நடக்கிறது. அப்போது ஒரு கையால் சண்டை செய்து கொண்டே இன்னொரு கையால் ஒவ்வொரு கம்பியாக பிடித்து செல்ல வேண்டும். இதில் நடிப்பதில் ரிஸ்க் என்பதால், டூப் நடிகரை வைத்து எடுத்து விட நினைத்தேன். ஆனால் அஜீத் குறுக்கிட்டு, இந்த சண்டை கட்சியில் டூப் வைத்து எடுக்க தேவையில்லை, நானே நடித்து விடுகிறேன் என்று அவரே நடித்தார்.
இதனால் அந்த காட்சியை படமாக்கி முடிக்கிற வரைக்கும் பயமாக இருந்தது. அந்த காட்சியை முடித்து விட்டு வந்தபோது, ஏன் சார் ரிஸ்க் எடுக்கிறீங்க? என்று கேட்டபோது, ‘படத்தின் ரொமான்ஸ் காட்சிகளில் ஹீரோ நடிச்சுட்டு, சண்டை மாதிரியான ரிஸ்க்கான காட்சிகளில் டூப் வைத்து நடிக்கிறது எந்த விதத்திலும் நியாயம் இல்லை’ என்று அஜீத் கூறியதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி