இசையமைப்பாளர் தமனின் புதிய படமான ‘டமால் டுமீல்’ படத்தின் பாடல்கள் தற்போது ஒலிப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நடிகர் வைபவும், ‘பீட்சா’ படப்புகழ் ரம்யா நம்பீசனும் பிரதான வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தினை ஸ்ரீ இயக்கி வருகின்றார்.
பாடல் ஒலிப்பதிவு பற்றி ஸ்ரீ கூறுகையில், இந்தப் படத்தின் தலைப்புப் பாடலாகவும், விளம்பரப் பாடலாகவும் எழுதப்பட்ட ஒரு பாடலைப் பாட வித்தியாசமான குரல் வேண்டும் என்று தமனிடம் கூறினேன். இதனைக் கேட்ட அவர் இதற்காக பாடகி உஷா உதுப்பைத் தொடர்பு கொண்டுள்ளார். அந்தப் பாடலின் இசை வடிவத்தை அனுப்புமாறு கேட்டிருந்த உஷா உதுப்பிற்கு அந்தப் பாடல் அனுப்பப்பட்டது. அதன் இசையால் கவரப்பட்ட உஷா இங்கு வந்து பாடிக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.
அவர் பாடத் தொடங்கியதுமே அந்தப் பாடலின் சக்தி வெளிப்பட்டது. பாடலைப் பாடி முடித்ததும் இந்த வருடத்தின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று குறிப்பிட்ட உஷா உதுப் தனது நிகழ்ச்சிகளிலும் இனி இந்தப் பாடலைப் பாடுவதாகத் தெரிவித்துள்ளார்.
இப்பாடல் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும் இந்தப் பாடல் கதையின் கருவையும் ஒட்டி அமைந்துள்ளது. எனவே, திரையில் காணும்போது ரசிகர்கள் இதனை நன்றாக அனுபவிக்க முடியும் என்று இயக்குநர் ஸ்ரீ கூறினார். ஒற்றைப் பாடலாக இந்தப் பாடல் இன்று வெளியிடப்படுகின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி