செய்திகள் “கேழ்வரகு” இடியாப்பம்…

“கேழ்வரகு” இடியாப்பம்…

“கேழ்வரகு” இடியாப்பம்… post thumbnail image

தேவையானவை:

கேழ்வரகு மாவு – 200 கிராம்,
கேரட் துருவல் – அரை கப்
கோஸ் துருவல் – அரை ஒரு கப்,
வெங்காய தாள் – அரை கப்
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
நெய் – 2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கேழ்வரகு மாவில் இடியாப்பம் செய்து கொள்ளவும். அல்லது ரெடிமேடாக கேழ்வரகு இடியாப்பம் கிடைக்கிறது அதையும் பயன்படுத்தலாம். வாணலியில் நெய் விட்டு, கேரட் துருவல், நறுக்கிய வெங்காய தாள், கோஸ் துருவல், பச்சை மிளகாய் சேர்த்துசிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வதக்கிய காய்கறிகளுடன் பிழிந்து வைத்திருக்கும் இடியாப்பத்தை சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி