செய்திகள் விமானத்தில் இருந்து விழுந்த மனித உறுப்புகள்…

விமானத்தில் இருந்து விழுந்த மனித உறுப்புகள்…

விமானத்தில் இருந்து விழுந்த மனித உறுப்புகள்… post thumbnail image
ஜெட்டா:-சவுதி அரேபியன் ஏர்லைன்சின் ஜெட் விமானம் ஒன்று 315 பயணிகளுடன் ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாதிலிருந்து புறப்பட்டு பறந்து கொண்டிருந்தது.

இந்த விமானம் சவுதியின் வடக்குப் பகுதி நகரமான மெதினாவில் அவசரமாகத் தரையிறங்கியது. இதில் 29 பேர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் அந்நாட்டின் ஜெட்டா நகரத்தில் உள்ள முஷாரபா பகுதியில் உள்ள சந்திப்பு ஒன்றில் வானிலிருந்து மனித உறுப்புகள் விழுந்ததாக காவல்துறைக்கு ஒரு தொலைபேசித் தகவல் வந்துள்ளது.ஆரம்பகட்ட விசாரணையில் இந்த உறுப்புகள் பறந்து கொண்டிருந்த விமானத்தின் அடிப்பகுதியில் சட்டவிரோதமாகப் பயணம் செய்ய முயற்சித்தவர் எவரேனும் அதன் பகுதிகளில் சிக்கி சிதைந்து இறந்ததால் விழுந்திருக்கக்கூடும் என்று தகவல் அதிகாரியான நவாப் பின் நாசர்-அல்-பவுக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிக்கை சவுதியின் விமானம் தரையிறக்கப்பட்டபின் வெளிவந்துள்ளது. ஆயினும் ஜெட்டாவில் நடந்த சம்பவத்திற்கும், மெதினாவில் விமானம் தரையிறக்கப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து பொது அதிகார செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.ஆயினும் ஒரு நாட்டின் எல்லையைக் கடக்க விரும்பும் சிலர் இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு அந்த முயற்சியில் பெரும்பாலும் உயிரிழக்கின்றார்கள்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் லெபனானிலிருந்து சவுதி செல்லும் ஏர்பஸ் விமானம் ஒன்றின் அடிப்பகுதியில் பயணம் செய்ய முயற்சித்த ஒரு மனிதன் இறந்துபோனான். ரியாத்தில் இறங்கிய விமானத்தை பராமரிப்பு ஊழியர் சுத்தம் செய்யும்போது அந்த மனிதனின் உடலைக் கண்டுபிடித்தார். இதனை முன்னிட்டு பெய்ரூட் விமானநிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் பதவியிலிருந்து விலக நேரிட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி