செய்திகள் பொங்கலுக்கு “சிறப்பு பஸ்கள்” ரெடி!…

பொங்கலுக்கு “சிறப்பு பஸ்கள்” ரெடி!…

பொங்கலுக்கு “சிறப்பு பஸ்கள்” ரெடி!… post thumbnail image

சென்னையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13 ஆயிரத்து 28 சிறப்பு பேருந்துகளை தமிழகம்இயக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை கோயம் பேட்டில் இருந்து வரும் 10 தேதி 600 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.11-ம் தேதி 1,325 பஸ்களும் 12-ம் தேதி ஆயிரத்து 175 பஸ்களும் இயக்கப்பட உள்ளது. சென்னையை தவிர்த்தபிற பகுதிகளில் 10-ம் தேதி 345 பஸ்களும் 11-ம் தேதி 750, 12-ம்தேதி 760 பஸ்களும் 13-ம் தேதி ஆயிரத்து 220 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.சென்னையில் இருந்து 13-ம் தேதி 339பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இதே அளவிலான பஸ்கள் வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இயக்கப்படும். 300 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லக்கூடிய பஸ்களில் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்துக்கு அதிகாரி தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி