இந்த கொள்கையை எதிர்த்து மூத்த பத்திரிகையாளர் ஒருவர் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்தார். இதற்கு பதில் அளித்த ஓட்டல் உரிமையாளர், தனது கொள்கையை மாற்றுவதாக கூறியுள்ளார். ஆனால், பாகிஸ்தானியர்களுக்கான தடை தொடர்ந்தது.இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் அளித்துள்ள விளக்கத்தில், “உள்ளூர் மக்களின் கலாச்சாரத்திற்கு மதிப்பு அளிக்க முயற்சி செய்கிறேன். இஸ்லாம் மதம் ஏற்காத உணவை நாங்கள் பரிமாறுவதால் பொதுமக்கள் அனைவரும் வருவதற்கு சாத்தியமல்ல. எங்கள் கொள்கையில் நாங்கள் நிலையாக இருக்கிறோம். இரட்டை குடியுரிமை கொண்ட பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரையும் வரவேற்கிறோம். முஸ்லிம் மக்களின் உணர்வுகளை காயப்படுத்த நான் விரும்பவில்லை. நம்பகமான பிரெஞ்சு உணவுகளை வழங்கவே இந்த ஓட்டலை நடத்துகிறோம்” என்று கூறியிருந்தார்.
இந்த விளக்கத்தை பொதுமக்கள் ஏற்கவில்லை. சர்ச்சைக்குரிய இந்த ஓட்டல் நிர்வாகம் பற்றி பல்வேறு பத்திரிகைகளில் செய்தி வெளியாகி, பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.இதையடுத்து அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், ஓட்டலை இழுத்து மூடினர். மேலும் அங்கு சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி