நீதிக்கட்சி, 1926–30 காலகட்டத்திலும், 1937 முதல் 1944 இல் திராவிடர் கழகமாக மாறும் வரை எதிர்க்கட்சியாக செயல்பட்டது.
நீதிக்கட்சியின் செயல்பாடு 1926 முதல் 1930 வரை:-
1926 சட்டமன்றத் தேர்தலில் சுயாட்சிக் கட்சியே தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. ஆனால் இரட்டை ஆட்சி முறையை அது எதிர்த்ததால் ஆட்சியமைக்க மறுத்துவிட்டது. சென்னை ஆளுனர் ஜார்ஜ் கோஷன் நீதிக்கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் சிறுபான்மை அரசமைக்க விருப்பமில்லாததாலும் ஆளுனருடன் கருத்து வேறுபாடு நிலவியதாலும் பனகல் அரசர் ஆட்சியமைக்க மறுத்து விட்டார். இதனால் கோஷன் தேசியவாத சுயேட்சை உறுப்பினர்களைக் கொண்டு ப. சுப்பராயன் தலைமையில் ஒரு சுயேட்சை அரசினை உருவாக்கினார்.
சுயாட்சிக் கட்சியும், நீதிக்கட்சியும் எதிர்க்கட்சிகளாக செயல்பட்டன. 1927 இல் இக்கட்சிகள் இணைந்து சுப்பராயனுக்கு எதிராகக் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் துணையால் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் சுப்பராயன் அரசு பாதிப் பதவிக்காலத்தைத் தாண்டும் முன்னர் சுப்பாராயன் அரசு சைமன் குழு சென்னைக்கு வருகை தந்தபோது அதனை எதிர்ப்பது குறித்து எழுந்த அரசியல் மாற்றங்களால் நீதிக்கட்சியின் எதிர்ப்பு, ஆதரவாக மாறியது. பனகல் அரசர் டிசம்பர் 1928 இல் மரணமடைந்த பின்னர் நீதிக்கட்சி இரு குழுக்களாகப் பிரிந்தது. அவர்களில் என். ஜி. ரங்கா தலைமையிலான அமைச்சர், ஆதரவாளர்கள், பிராமணர்கள் கட்சி உறுப்பினர்களாவதற்கு இருந்த தடையினை நீக்கக் கோரினர். கட்சியின் பதினோராவது வருடாந்திர மாநாட்டில் இரு குழுக்களிடையே உடன்படிக்கை ஏற்பட்டு முனுசாமி நாயுடு கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நீதிக்கட்சியின் செயல்பாடு 1936 முதல் 1944 வரை:-
திராவிட நாடு:-
திராவிட நாடு அல்லது திராவிடர் நாடு தெற்கு ஆசியாவில் பிரமானரல்லாத திராவிட மொழி பேசுபவர்களால் தனிநாடு கோரி முன்மொழியப்பட்ட பெயராகும். ஆரம்பகாலத்தில் தமிழர் வாழும் பகுதிகளுக்கு மட்டும் இக்கோரிக்கை எழுந்தது. பின்னாளில் திராவிட மொழிகள் பேசும் பிற மாநிலத்தவர்களை (ஆந்திரப் பிரதேசம், கேரளா, மற்றும் கர்நாடகா) ஒருங்கிணைத்து கூறப்பட்டது. இக் கோரிக்கை இலங்கை, ஒரிசா, மகாராஷ்டிரா ஆகியவற்றுக்கும் சேர்த்து கேட்கப்பட்டது.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் :-
இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழக மக்களால், பெரும்பாலும் ஜனநாயக, அற வழிகளில் நடத்தப்பட்ட போராட்டமாகும்.
1937ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரசுக் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. அதை எதிர்த்து, எதிர்கட்சியாக விளங்கிய நீதிக்கட்சியும், பெரியார் ஈ. வெ. இராமசாமியும் மூன்று ஆண்டுகள் உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர். காங்கிரஸ் அரசு 1939ஆம் ஆண்டு பதவி விலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் ‘எர்ஸ்கின் பிரபு’ பிப்ரவரி 1940ஆம் ஆண்டில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.
இங்கிலாந்திலிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு அரசியலமைப்பு சட்டமன்றத்தில் புதிய இந்தியக் குடியரசில் நிலவ வேண்டிய அலுவல்மொழி குறித்து நீண்ட விவாதம் நடந்தது. பற்பல உரையாடல்களுக்குப் பின்னர் தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி அரசுப்பணி மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல்மொழியாக விளங்கும் என்றும் அதன் பின்னர் இந்தி மொழி மட்டுமே அரசுப்பணிகளில் பயன்படுத்தப்படும் என்றும் ஏற்றுக்கொள்ளபட்டது.
பன்னீர்செல்வம் 1937 தேர்தலில் வெற்றிபெற்ற சில நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவர். இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக நீதிக்கட்சி ஈ. வே. ராமசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. பொபிலி அரசரின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் ஈ. வே. ராமசாமி டிசம்பர் 29, 1938 இல் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு காலத்தில் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த பெரியார் பல ஆண்டுகளாக நீதிக்கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.
…..( தொடரும் )…..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி