செய்திகள் காரைக்குடி அருகே கதவை உடைத்து நகை,பணம் கொள்ளை…

காரைக்குடி அருகே கதவை உடைத்து நகை,பணம் கொள்ளை…

காரைக்குடி அருகே கதவை உடைத்து நகை,பணம் கொள்ளை… post thumbnail image
காரைக்குடி:-காரைக்குடி அருகே உள்ள பாப்பாவூரணி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி. இவர் வீட்டை பூட்டிவிட்டு திருவாடானையில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்று விட்டார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட ‘மர்ம’ ஆசாமிகள் நள்ளிரவு நேரத்தில் ராணி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்குள்ள பீரோவில் இருந்த 9 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் கொண்டு தப்பினர். வீடு திரும்பிய ராணி வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு 9 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் காரைக்குடி தெற்கு போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் டி.எஸ்.பி. முருகேஷ் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்–இன்ஸ்பெக்டர் ரஜினி காந்த், முத்துராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி