மும்பையில் பெரிய தொழில் அதிபர்கள் தங்கள் காரின் பதிவு எண்களை பேன்சியாக வைத்துக் கொள்ள பெரிதும் விரும்புகிறார்கள். தங்கள் ராசிக்கு ஏற்ப கார்களின் எண்களை தேர்வு செய்கிறார்கள்.
பேன்சி எண்களுக்கு தக்கபடி அதற்கு கட்டணத்தை மும்பை வட்டார போக்குவரத்து அலுவலகம் நிர்ணயித்துள்ளது. வி.ஐ.பி.க்களுக்கான 1–ம் எண்ணுக்கு ரூ.1 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வி.ஜ.பி.க்கள் யாரும் அதை வாங்காத பட்சத்தில் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும்.
அதன்படி 1–ம் நம்பரை மும்பை தொழில் அதிபர் ஒருவர் ரூ.12 லட்சம் செலுத்தி பெற்று இருக்கிறார். கடந்த ஆண்டு 1–ம் நம்பருக்கான கட்டணம் ரூ. 4 லட்சமாக உயர்த்தப்பட்டு இருந்தது. இப்போது ரூ. 12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாட்டிலேயே 1–ம் நம்பருக்காக இந்த அளவுக்கு விலை கொடுத்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
1–ம் நம்பரை ஒருவர் மட்டும் கேட்டிருந்ததால் அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்டோர் கேட்டு இருந்தால் ஏலம் விட்டு விலை நிர்ணயம் செய்யப்படும் என்று போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி