லாகூர்:-பாகிஸ்தானில் உள்ள லாகூர் கண்டோன்மென்ட் பகுதியை சேர்ந்தவர் அல்டாப் மகமூத். இவரது வீட்டில் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 3 மாதமாக வீட்டு வேலை செய்து வந்தாள்.
இவள் வீட்டில் இருந்த 100 ரூபாயை திருடினாள்.இதனால் ஆத்திரம் அடைந்த அல்டாப் மகமூத், அவரது மனைவி நசீரா, மகன் இப்ரார் ஆகியோர் சேர்ந்து பிளாஸ்டிக் குழாயால் அவளை சரமாரியாக அடித்து உதைத்தனர். உடலில் காயங்கள் ஏற்பட்ட அவள் பரிதாபமாக இறந்தாள்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் அல்டாப் மகமூத், அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி