வங்கி எதிரே அருக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. நள்ளிரவு வங்கிக்குள் ஏதோ உடைக்கும் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு உரிமையாளர் பெண் சரஸ்வதி விழித்துக் கொண்டார். நீண்ட நேரம் சத்தம் கேட்டதால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.உடனே அவர் தாம்பரத்தில் வசிக்கும் தனது மருமகன் ராமனிடம் கூறினார். அவர் அவசர போலீஸ் உதவி எண் 100–ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதோடு நங்கநல்லூரில் வசிக்கும் வங்கி மானேஜர் தியாகராஜனுக்கும் தகவல் சொன்னார்.தற்கிடையே வங்கிக்குள் புகுந்தவன் கொள்ளையனாக இருக்கும் என்று உணர்ந்த சரஸ்வதி வீட்டின் வெளிப்புற விளக்குகளை எரிய விட்டார். அதோடு உதவிக்கு கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் பால்கனி வழியாக எட்டிப்பார்த்தனர்.
இதை அறிந்த கொள்ளையன் ஆட்கள் வருவதற்குள் வந்த வழியாக தப்பிவிட்டான். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வங்கியின் கிரில் கேட்டை உடைத்து கொள்ளையன் உள்ளே புகுந்து இருக்கிறான். நகை, பணம் உள்ள லாக்கரை திறக்க முயன்றான். அது முடியாமல் போனதால் லாக்கரையே பெயர்த்து எடுக்க கடப்பாரையால் உடைத்தான்.அந்த சத்தம்தான் தெருவாசிகளை திரள வைத்தது. இதனால் தப்பினால் போதும் என்ற நினைப்பில் கொள்ளையன் தப்பி விட்டான்.
வங்கியினுள் கொள்ளையன் கொண்டு வந்த ஆக்சா பிளேடு கிடந்தது. மூதாட்டி சரஸ்வதி சாமர்த்தியத்தால் கொள்ளை தடுக்கப்பட்டது. லட்சகணக்கான நகை– பணம் தப்பியது.வங்கியில் இருந்த கேமராவை போலீசார் ஆய்வு செய்ததில் கொள்ளையன் முகமூடி அணிந்து இருந்தது தெரிய வந்தது. அவன் மட்டும் கொள்ளையடிக்க வந்தானா? கூட்டாளிகளுக்கும் பங்கு உண்டா? என்பது தெரியவில்லை. இது குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி