இதையடுத்து தனது அடுத்த படத்தின் வேலையை தொடங்கிவிட்டார் பாலாஜி மோகன். புதிய படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளார். தனுஷுக்கு சென்ற 2013ஆம் ஆண்டு வெளியான மரியான், நையாண்டி ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியாக சரியாக ஓடவில்லை என்பதால் புதிய வித்தியாசமான இயக்குனர்கள் மீது அவருடைய பார்வை பதிந்துள்ளது. காதலில் சொதப்புவது எப்படி ரிலீஸானபோது இந்த படத்தில் தனுஷ் நடித்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் என பல பத்திரிகைகளில் விமர்சனம் வந்தது. எனவே அதை மனதில் வைத்து பாலாஜி மோகன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த படம் காதலில் சொதப்புவது எப்படி படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது.இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால் முதன்முறையாக நடிக்கிறார். சூர்யா, விஜய், போன்ற பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால், தனுஷுடன் நடிப்பதால் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி