7–வது ஐ.பி.எல் போட்டி ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் இந்தப் போட்டிக்கான தேதியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009–ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதே சூழ் நிலை மீண்டும் உருவாகி உள்ளது. இந்தியாவில் பாதி போட்டிகளையும், தென் ஆப்பிரிக்காவில் பாதி போட்டிகளையும் நடத்தலாமா? என்று ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் இலங்கையிலும் சில ஆட்டங்களை நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்– மே மாதங்களில் நடைபெறலாம் என்று தெரிவதால் போட்டி நடைபெறும் தேதியில் தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளது.
இதை தொடர்ந்து ஐ.பி.எல். ஆட்சி மற்ற குழு இந்த மாத இறுதியில் ஆலோசனை நடத்துகிறது இந்த கூட்டத்தில் ஐ.பி.எல். போட்டி தேதி குறித்து முடிவு செய்யப்படுகிறது. இதை ஐ.பி.எல் சேர்மன் ரன்ஜிப் பிஸ்வால் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி