இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு , அவர் 20 பெண்களுக்கு “இலவச தையல்” எந்திரங்கள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சி சென்னை ஆர்கேவி அரங்கில் நடந்துள்ளது.அந்த நிகழ்ச்சியில் ஜீவா பேசுகையில், இந்த முறை ஒரு நடிகராக மட்டுமல்ல, “தயாரிப்பாளராகவும்” மாறியிருக்கிறேன் என்றார்.
அண்ணன் விஜய் நடிக்கும் ஜில்லா படத்துக்கு நானும், அண்ணனும் இணைத் தயாரிப்பாளர்கள். எல்லோரது படங்களும் நன்றாக ஓடணும் என்றும்,. சினிமா என்பது ஒருவரையொருவர் சார்ந்து இயங்கும் உலகம்,அதற்கு நீங்கள் எல்லாம் படத்தை திரையரங்கில் போய் பார்க்கணும்.. அதுவும் எல்லாரும் மறக்காம “திருட்டு விசிடில பாருங்க” என்று வாய் தவறி உளறியதால் சிரிப்பில் அரங்கம் அதிர்ந்தது.
பின்னர் ஒருவழியாக, மன்னிக்கவும் விஜய் – அஜித் பற்றி பேசினாலே இப்படித்தான் தடுமாறுகிறது என்று ஒருவழியாக சமாளித்துள்ளார் ஜீவா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி