“அதிரடி” படத்தின் தொடக்க விழாவில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் வடிவில் பிரத்யேகமாக செய்யப்பட்ட மிகப்பெரிய கேக் வெட்டப்பட்டது. படத்தின் பெயருக்கு தகுந்தாற்போல் விழா மேடையில் மன்சூர் அலிகான் அதிரடியாக பல சாகசங்களை செய்தார்.
மன்சூர் அலிகான் அவர் வயிற்றின் மீது 125 கிலோ எடையுள்ள ஒருவரை நிற்க வைத்து உடற்பயிற்சி செய்ய வைத்தார். 50 வினாடிகளில், 50 பச்சை முட்டைகளை உடைத்து குடித்தார். அதன்பிறகு, அவரது வயிற்றில் பெரிய கற்களை வைத்து சம்மட்டியால் உடைத்தார். நெருப்பு வைத்து அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஓடுகளை கையினாலும், தலையினாலும் உடைத்தார்.
பின்னர், பீர்பாட்டில்களை வெறும் கையினால் உடைத்து நொறுக்கினார். படவிழாவையொட்டி இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. நிகழ்ச்சியில் மன்சூர் அலிகானின் மகன்களும், மகள்களும் கலந்து கொண்டு பாடினார்கள். இப்படி பல வித்தைகளுடன் பட தொடக்க விழா நடைப்பெற்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி