இயக்குனர் ரமேஷ் செல்வம் கூறியபோது, “ஒரு தனி மனிதனையோ அல்லது சமுதாயத்தையோ அதன் வீழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சேர்க்கும் திட்டமிட்ட சதியே “கலவரம்”. ஒரு உண்மை கலவரத்தை மையமாக கொண்டும், அரசியலை கருவாக கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கலவரத்தின் ஆரம்ப நிலையிலிருந்து கடைசி வரை, அச்சம்பவ களத்தின் உண்மை முகங்களை வெளிச்சமிட்டு காட்டுவது தான் இக்‘கலவரம்’ என்றார்.
இந்தப் படத்தில் கானாபாலா “சொய்யாங் சொய்யாங்” என்ற பாடலை பாடி நடிக்கவும் செய்துள்ளார். இது பக்கா கமர்ஷியல் பாடலாக இருக்கும் என்கிறது படக்குழு.
இந்தப் படம் யுனிவர்சல் புரொடக்ஷன் தயாரிப்பில் நீண்ட நாட்களாகியும் வெளியிடமுடியாத சூழல் இருந்தது. இந்நிலையில் ‘ஜில்லா’, ‘வீரம்’ ஆகிய படங்களுடன் பொங்கல் வெளியீடாக “கலவரம்” படத்தை திரைக்கு கொண்டுவர தீர்மானித்திருக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி