நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் திரைப்படம் “இது கதிர்வேலன் காதல்” பணிகள் முடிந்து விட்டது. அதில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சுந்தர பாண்டியன் படத்தை டைரக்ட் செய்த எஸ்.ஆர்.பிரகாரன் டைரக்ட் செய்துள்ளார். இது காமெடி ரொமாண்டிக் பிலிம். பிப்ரவரியில் ரிலீசாகிறது.
“இது கதிர்வேலன் காதல்” படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த படமான “நண்பேண்டாவை” துவக்கி விட்டார். இதில் உதயநிதிக்கு “காஜல் அகர்வால்” ஜோடியாக நடிக்கிறார். ஜே.ஜெகதீஸ் டைரக்ட் செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படமும் காதல் ரொமாண்டிக் படம்தான். உதயநிதியும், சந்தானமும் படம் முழுக்க இணைந்து வருகிறார்கள். படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பிப்ரவரி முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கிறார்கள்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி