“குமரி” மாவட்டம் திங்கள் சந்தையில் வெட்டுக்காட்டு விளை பகுதியை சேர்ந்த திவாகரன். இவரது மகள் ரம்யா வயது 19 இவருக்கும் ஈரோடு கருங்கல்பாளையம் சேக்கிழார் வீதியை சேர்ந்த மூர்த்தி வயது 26 என்பருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
மூர்த்தி “டெம்போ” டிரைவராக வேலை பார்த்து வருகிறார். திருமணத்துக்கு பின்னர் கணவன் மனைவி இருவரும் சேக்கிழார் வீதியில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். குழந்தை பெற்றுக் கொள்வதில் கணவன்– மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. ரம்யா உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மூர்த்தி கடன் பிரச்சினைகள் முடிந்த பின்னர் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
பின்னர், இரவு மூர்த்தி வெளியே சென்றார். நள்ளிரவு குடிபோதையில் வீடு திரும்பினார். இதையடுத்து கணவன்– மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மூர்ததி மனைவியை அடித்து உதைத்ததாக தெரிகிறது. கணவன் அடி–உதை தாங்க முடியாத ரம்யா ‘‘உன்னுடன் வாழ்வதை விட செத்துபோவதே மேல்’’ என கூறிவிட்டு அங்கிருந்த மண்எண்ணையை உடலில் எடுத்து ஊற்றினார்.
அப்போது மூர்த்தி ‘‘நீ என்ன சாவதற்கு நானே கொளுத்தி விடுகிறேன்’’ என்று கூறியபடி தீப்பெட்டியை எடுத்து கொளுத்தி போட்டதாக கூறப்படுகிறது. அடுத்த நொடி நைட்டியில் தீப்பிடித்து ரம்யா உடல் கருகி துடித்தார். இந்த வேதனையில் ஆவேசத்துடன் கணவரை கட்டி பிடித்தாக கூறப்படுகிறது. இதில் கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. உறவினர்கள் இருவரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை ரம்யா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் “போலீசார்” வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூர்த்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரம்யா இறந்த தகவல் அறிந்த அவர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திங்கள் சந்தையில் இருந்து ஈரோடு வந்தனர். அவர்கள் ரம்யா உடலை பார்த்து கதறி அழுதனர்.
முதலில் ரம்யா கணவர் சிகரெட் பற்றவைக்கும்போது தான் தட்டிவிட்டு மண்எண்ணை உடலில் கொட்டி தீ விபத்து ஏற்பட்டதாக கூறினார். பின்னர் நடத்திய விசாரணையில் கணவரே கொளுத்தியது தொயவந்தது. முதலில் கணவருக்கு பயந்து ரம்யா அவ்வாறு கூறி இருக்கலாம் என போலீசார் தொவித்தனர்.
“ரம்யாவின்” அண்ணன் செந்தில்குமார் கூறியதாவது:–
எனது சித்தி கருங்கல்பாளையத்தில் கணவருடன் வசித்து வருகிறார். அவர் சொல்லிதான் வேறு சமூகத்தை சேர்ந்தவருக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தோம். திருமணத்தின்போது 12 பவுன் நகை போட்டோம். பின்னர் எங்களிடம் ரூ. ஒரு லட்சம் கடனாக பெற்றார். அதை திருப்பி தரவில்லை. எப்போதும் பணம், கடன் பிரச்சினை என்று கூறி கடைசியில் எனது தங்கையை எரித்து கொன்று விட்டார். என்று கண்ணீருடன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி