சித்ரம், நுல்வே நீனு, மனசார்ந்த நுவே உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர்” உதய் கிரண்” நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவருக்கு 33 வயது. நீண்ட நாள் தோழி விசித்தாவை திருமணம் செய்து கொண்டார்.பின்னர், “20” நாளிலேயே அவர்களது மணவாழ்க்கை முறிந்தது. இதனால், மனம் உடைந்த உதய் கிரண் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். தமிழில் பாலசந்தர் இயக்கத்தில் பொய், கலைஞரின் கதை வசனத்தில் பெண் சிங்கம், வம்பு சண்டை ஆகிய படங்களில் உதய் கிரண் நடித்தவர்.
2001-ல், சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். 2006-ல் சிறந்த இளம் நடிகருக்கான விருதை, கமல் ஹசனுக்கு பின்னர், இவர் தான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி