சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தப்போட்டி இடமாற்றம் செய்யப்படுமா என்பது பற்றி இதுவரை அறிவிக்க வில்லை. வங்காளதேசத்தில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறாவிட்டால் அங்கிருந்து இந்தியாவுக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. இதேபோல ஆசிய கோப்பை போட்டியையும் நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் நிஷந்தா ரனதுங்கா இதை தெரிவித்து உள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 24–ந்தேதி முதல் மார்ச் 7–ந்தேதி வரை வங்காளதேசத்தில் நடக்கிறது. அங்கு நடைபெற்று வரும் கலவரம் காரணமாக பாதுகாப்பு கருதி இந்தப்போட்டியும் இடம் மாற்றம் செய்யப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி