“சோனி நிறுவனம்”, மொபைல் உலகில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனம், இந்த மாதம் 14ம் தேதி புதிதாக ஒரு மொபைலை வெளியிட இருக்கின்றது. அதன் பெயர் சோனி “எக்ஸ்பீரியா Z1” ஆகும்.
இந்த மொபைலை சோனி நிறுவனம் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கின்றது நிச்சயம் பெரும் வெற்றி பெறும் என்றும் அது எதிர்பாக்கிறது.இந்த மொபைல் “4.2 இன்ச்” நீளம் கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு “4.2 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸில்” இயங்கக் கூடியதாகும், இதில் 2.2 GHz quad-core Snapdragon 800 பிராஸஸர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
கேமரா, இதில் முக்கிய அம்சமாக விளங்குகிறது. இதில் 20.7MP க்கு கேமரா உள்ளது.மேலும் பிரன்ட் கேமரா 2MP க்கு மட்டும் உள்ளது என்பது கொஞ்சம் மைனஸ் தாங்க. இதில் 2GB க்கு ரேம், 16GB க்கு இன்டர்நெல் மெமரி என அனைத்தும் இதில் ஒரு இருக்கிறது. இதன் பேட்டரி பவர் 2300mAH ஆகும். இதன் விலை குறித்து சோனி நிறுவனம் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி