தேவையான பொருட்கள்:
பார்லி – 1 கப்
கேழ்வரகு மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 1
தயிர் – 1 கப்
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முதல் நாள் இரவு கேழ்வரகு மாவினை 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கரைத்து புளிக்க வைக்கவும். மறுநாள் மதியம் பார்லி, 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு 7 விசில் வரை வரை வேக விடவும்.
பின்னர், குக்கரின் பிரசர் அடங்கியதும் முதல் நாள் இரவு கரைத்து வைத்துள்ள கேழ்வரகு கலவையினை இதனுடன் சேர்த்து வேக வைக்க வேண்டும். அடுப்பை மீதமான தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும்.
இப்போது கூழ் தயார் . இதனை அப்படியே வைத்து விட்டு மறுநாள் காலை இந்த கூழை கரைத்து கொள்ளவும்.கூழ், வெங்காயம், தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கூழினை கரைத்து பருகலாம். சுவையான சத்தான கேழ்வரகு கூழ் தயார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி